எனது பதவிக்காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவரையும் அனுமதிக்க மாட்டேன் - ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#srilanka freedom party
#sri lanka tamil news
#Ranil wickremesinghe
Prabha Praneetha
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் அரச தலைவராக இருக்கும் காலத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளார்.
இன்று மாலை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் விசேட உரை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், ‘வன்முறைப் போராட்டக்காரர்கள்’ நாடாளுமன்ற வளாகத்தை கைப்பற்றுவதைத் தடுக்கவும், நாடு அராஜக நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்கவும் எடுத்த முயற்சிகளுக்கு முப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் தனது நன்றியை விக்ரமசிங்க தெரிவித்தார்.



