இறக்குமதி செய்யப்படும் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
                                                        #SriLanka
                                                        #Sri Lanka President 
                                                        #Import
                                                        #sugar
                                                        #sri lanka tamil news
                                                        #Tamilnews
                                                        #Lanka4
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                இறக்குமதி செய்யப்படும் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 200 ரூபாவாகவும், 340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோ ஒன்றின் விலை 310 ரூபாவாகவும், 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாவாக காணப்படுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.