பெப்ரவரி மாதம் இலங்கைக்கு இறக்குமதி செலவும் ஏற்றுமதி வருமானமும் சமன்

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
பெப்ரவரி மாதத்தின் இறக்குமதி செலவு 1 பில்லியன் டொலர்கள்.
ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதை முன்னர் பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஏற்றுமதி வருமானமாக 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்ட நிலையில், இறக்குமதிக்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
மொத்தத்தில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள். ஆனால் இறக்குமதி செலவு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க குறைவு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஏற்றுமதி வருவாய் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இறக்குமதி செலவு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.



