உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த புலஸ்தினி மகேந்திரனின் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை

#Easter Sunday Attack #Death #Police #Arrest #Lanka4
Kanimoli
2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த புலஸ்தினி மகேந்திரனின்   ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் புலஸ்தினி மகேந்திரனின் என்ற சாரா ஜெஸ்மின் மரணம் அடைந்ததாக கூறப்படுவது குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கர்தினாலின் மெல்கம் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் சாரா கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

எனினும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை, அந்த திணைக்களத்தின முன்னைய அறிக்கைகளுக்கு முரணானது என்பதை சிறில் காமினி சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே, இதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாக்குதலின் பின்னர் சாரா ஜெஸ்மின் இந்தியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக இதுவரை சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இறந்துவிட்ட செய்தி வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!