ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசுடன் இணைய விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து 20 பேர் அரசுடன் இணைய விருப்பம் அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு முன்பதாக பாராளுமன்றம் ஏப்ரல் 04 ஆம் திகதி கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் 20 க்கு மேற்பட்டவர்கள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்றைய தினம் முதற்கட்டமாக சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஏனையோர் இணையத் தீர்மானித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கட்சி மாற்றம் இடம்பெறுமானால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழேயே இந்த எம்.பிக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



