அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து - 9 வீரர்கள் பலி

#America #Soldiers #Death #Helicopter #Crash #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து - 9 வீரர்கள் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 9 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (இரவு 11 மணி ), போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில் ராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 

இதன்படி 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பலியான 9 வீரர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!