6 மாத குழந்தையின் உயிரைப் பறித்த குப்பி விளக்கு!
#SriLanka
#baby
#Death
#Vanni
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
விசுவமடு பகுதியை சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வேளை, வீட்டின் வெளியே யானைகளின் சத்தம் கேட்டதால், தாய் வீட்டின் வெளியே சென்று பார்த்த போது , குழந்தை படுக்கையில் உருண்டு , குப்பி விளக்கினை தட்டி வீழ்த்தியுள்ளது.
அதனையடுத்து ஏற்பட்ட தீ பரவலில் குழந்தை சிக்கி, தீக்காயங்களுக்கு உள்ளானது.
குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோது, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.



