திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்த முடிவு

#Jaffna #Police #Sri Lankan Army #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
 திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்த முடிவு

யாழ்ப்பாண தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது

இதன்படி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் தீவுப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்று யாழ்ப்பாண மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக புங்குடுதீவு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வேறு பகுதிகளுக்கு மாடு மற்றும் திருடப்படும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே இந்த விடயத்தில் சிறிலங்கா கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!