மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளில் திறந்து வைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் மக்களின் குடிநீர் தேவை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கம்பஹாவில் தெரிவித்தார்.
நான்கு இலட்சம் குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பாரிய நீர் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்ட போதே நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதற்கட்டமாக 33060 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் 5000 குடும்பங்கள் பயனடைந்தன.
கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொடை கூட்டு நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்த்திட்டம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
மாகாணத்திற்கு மாகாணம் நீர் திட்டங்களை கட்டம் கட்டமாக விரைவில் ஆரம்பித்து முறையாக முடிப்பதே எமது நோக்கமாகும்.
கம்பஹா மாவட்டத்தில் 180,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மகிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்தநாளில் திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இந்தத் திட்டங்கள் அனைத்தையும் ஒரு நாடாகக் கருத்தில் கொண்டால், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60% க்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது.



