சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அபராதம்!
#SriLanka
#Sri Lanka President
#Airport
#Tourist
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாளரத்தை உருவாக்கவும் சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமிக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.