33 வருடங்களின் பின் ஒன்றுசேர்ந்த யுத்தத்தால் பிரிந்த தம்பதியினர்

#SriLanka #War #Trincomalee #couple #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
33 வருடங்களின் பின் ஒன்றுசேர்ந்த யுத்தத்தால் பிரிந்த தம்பதியினர்

யுத்தத்தால் பிரிந்த தம்பதி 33 வருடங்களின் பின் சந்திப்பு!

திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.

போர்ச்சூழலில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சில குழந்தைகளைகணவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு குழந்தையுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து கொழும்பிற்கு வந்த அவர், அன்றிலிருந்து 33 ஆண்டுகளாக விகாரைகள், தேவாலயங்கள், பொது இடங்களில் பலதரப்பட்டவர்களின் உதவியால் வாழ்ந்து வந்துள்ளார்.

எனினும் அவருடன் வந்த குழந்தை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!