உபாதை காரணமாக கொல்கத்தா அணியின் புதிய தலைவராக நிதிஷ் ராணா நியமனம்

#IPL #Player #Injury #Tamilnews #Sports News #Lanka4
Prasu
2 years ago
உபாதை காரணமாக கொல்கத்தா அணியின் புதிய தலைவராக  நிதிஷ் ராணா நியமனம்

காயத்தால் அவதிப்பட்டு வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என தெரிகிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் பங்கேற்க முடியாமல் போகலாம். 

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக இடதுகை ஆட்டக்காரரான நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். 

முதுகு பகுதி காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து குணமடைந்து நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடுவார் என நம்புவதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நிதிஷ் ராணா கொல்கத்தா அணிக்காக 74 போட்டிகளில் விளையாடி 1744 ரன்கள் சேர்த்துள்ளார். 

வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மொகாலியில் ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!