போலிக் கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பரவி சுதாவின் நண்பர் விமானநிலையத்தில் கைது

முன்னணி போதைப்பொருள் கடத்தல் காரராகவும் துபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவனாகவும் கருதப்படும் பரவி சுதாவின் சகா ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது உண்மையான பெயருக்கு பதிலாக வேறு பெயரைப் பயன்படுத்தி போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களுக்கு தலைமை தாங்கி வரும் பரவி சுதாவை அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை முன்னெடுத்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.



