வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விவகாரம் இலங்கை இந்துசமய தொண்டர்சபை கண்டனம்!

#SriLanka #Sri Lanka President #Festival #Lifestyle #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விவகாரம் இலங்கை இந்துசமய தொண்டர்சபை கண்டனம்!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணமல் செய்யப்பட்ட செயலையும் இலங்கை இந்து சமயத் தொண்டர்  சபை வன்மையாக கண்டித்துள்ளது.

உடனடியாக இச் செயலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். சிவலிங்கமும் சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும்.

ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு, நேர்த்திக்கடன் நிறைவேற்றி வைத்த எட்டு அடி உயரமான சூலம் காணாமல் ஆக்கப்பட்டது தொடர் பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகி தீர்வு காண வேண்டும்.

ஆதி சிவன் கோவில்கள்  மீதான தொடர் விரும்பதகாத செயற்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது தமிழ்ச் சைவர்களின் மனதை  ஆழமாக பாதித்தது வருகின்றது.

இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவபெரியார்கள், செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம் - என்று இலங்கை  இந்து சமயத் தொண்டர் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!