அரசாங்கம் எரிபொருள் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாயால் குறைக்க வேண்டும் - ஆனந்த பாலித
#Fuel
#Tamil People
#Tamilnews
#Lanka4
#Tamil
#sri lanka tamil news
#srilankan politics
Prabha Praneetha
2 years ago
-1-1.jpg)
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வினால், அரசாங்கம் எரிபொருள் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாயால் குறைக்க வேண்டும் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது, நுகர்வோர்களால் உணரக்கூடிய வகையில், விலைகள் கணிசமான அளவு குறைக்கப்படம் என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
அந்த கணிசமான அளவு 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் விலையை 50 ரூபாய் குறைப்பது சுரண்டல் என்றும் ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.



