கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது
#drugs
#Drug shortage
#Police
#Arrest
#Lanka4
Kanimoli
2 years ago
கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு பொலிசாரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான நால்வர் கஞ்சா பொதியினை பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.
இதன் போது, குறித்த இரு பொலிசாரும் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து 2250 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.