மகனின் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை மரணம் - மகன் கைது

#SriLanka #Attack #Death #Arrest #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
மகனின் கிரிக்கெட்  மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை மரணம் - மகன் கைது

மகனின் கிரிக்கெட்  மட்டடையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டடைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.

18ம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 21ம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து தீவர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டு பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இன்று வியாழக்கிழமை அவரது பிரேத பரிசோதனை இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.அப்துர் றஹீம் தெரிவித்தார்.

பலியானவர் 65 வயதுடைய கடுசப்பிள்ளை கருணாகரன் என்ற ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!