தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும் முன்னாள் விமானப்படை அதிகாரிகறுப்பு பட்டியலில் சேர்ப்பு - ஹர்சன

#SriLanka #Air Force #officer #Blacklist #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும் முன்னாள் விமானப்படை அதிகாரிகறுப்பு பட்டியலில் சேர்ப்பு - ஹர்சன

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுகின்றார் என்பதற்காக அரசாங்கம் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியொருவரை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் ஹர்சனநாணயக்கார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் முன்னாள் இராணுவவீரர்கள் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ள ஹர்சன ராஜகருண இந்த பிரிவில் இணைந்துகொண்டமைக்காக முன்னாள் விமானப்படை அதிகாரி  எயர்வைஸ்மார்சல் சம்பத் துயாகொந்தவை அரசாங்கம் தடைசெய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற அதிகாரியொருவருக்கு தனது தனிப்பட்ட விடயங்களை தெரிவு செய்வது அடிப்படை உரிமை என ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரி கறுப்புபட்டியலில் இணைக்கப்பட்டார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ன விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ள ஹர்சன ராஜகருண கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறித்து முன்னாள் அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின்உள்நாட்டு யுத்தத்தின்போது எம்ஐ24 ஹெலிக்கொப்டர் படையணியின் விமானியாக பணியாற்றியவரே கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!