மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களும் வழங்கப்படும்: பிரதமர்
#SriLanka
#Sri Lanka President
#PrimeMinister
#Minister
#poor man
#government
#Development
#Lanka4
Mayoorikka
2 years ago

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது. அது முழு நாட்டிற்குமானதாக இருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவாறு கூறியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கதவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



