இலங்கையில் பால்மாவின் விலை குறைகின்றது! இறக்குமதியாளர்கள் தீர்மானம்
#SriLanka
#Milk Powder
#prices
#Food
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கையில் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.