உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன! ஐ.நா எச்சரித்து அறிக்கை

#SriLanka #UN #Food #report #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன!  ஐ.நா எச்சரித்து அறிக்கை

உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

அளவுக்கு அதிகமான மாசுபாடு தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை, மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.

காற்று மாசுபாடு புவியியல் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் எனவும் ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது பற்றி மனித குலத்தின் உயிர் நாடியான நீர் மாசுபாட்டாலும், காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் உண்டாகிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!