பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

#water #waterfowl #strike #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் இன்று இடம்பெறாது எனவும், சுங்கச்சாவடிகளையும் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்புடன் இணைந்து இன்று நண்பகல் 12 மணிக்கு பெலவத்தை நீர் வழங்கல் அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டமொன்றையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக திரு உபாலி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!