7000 பேரை பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ள டிஸ்னி நிறுவனம்

பொழுதுபோக்கு சேவை நிறுவனம் என்றால் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது டிஸ்னி மட்டும்தான். இதுதான் உலக அளவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக கருதப்படுகின்றது.
இந்த துறையில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களால் தங்களுடைய செலவுகளை குறைப்பதற்கு அந்நிறுவனம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இதில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் ஒன்றாகும். சமீப காலமாக அமேசான், ட்விட்டர், பேஸ்புக், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
அந்த வரிசையில் பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னியும் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாததால் தங்களுடைய ஊழியர்களில் சுமார் 7000 பேரை பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதில் முதல் பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் 4000 ஊழியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் மேலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



