ஆறு வருடங்களுக்கு முன்னர் துறைமுக ஊழியரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது

ஆறு வருடங்களுக்கு முன்னர் துறைமுகப் பணியாளர் ஒருவரை குறித்த வளாகத்தில் வைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துறைமுகத்தில் பணிபுரியும் பணி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் 41 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள சிறு தொழிலாளர்களின் ஓய்வறையில் ஏற்பட்ட தீ விபத்தில் களனி, கொனவல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய துறைமுக உதவியாளரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது சந்தேகநபர் அணிந்திருந்த சாரத்தில் ஊறவைக்கப்பட்bUe;jjhfTk; மற்றும் பல காரணங்களின் அடிப்படையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் இருந்த அதே அறையில் இருந்த சந்தேக நபரின் படுக்கையில் கண்டெடுக்கப்பட்ட பெற்றோல் மாதிரியும், குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த பெற்றோல் மாதிரியும் ஒன்றுதான் என்று அரசு ஆய்வாளரின் அறிக்கை கூறுகிறது.
இதனிடையே, அன்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அணிந்திருந்த சாரத்திற்குள் பெற்றோல் எவ்வாறு வந்தது? தீயில் சிக்காமல் தனது விலைமதிப்பற்ற உடைமைகளை (15000 ரூபாய் கொண்ட பணப்பை மற்றும் மொபைல் போன்) எப்படி காப்பாற்றினார்? என்ன காரணத்திற்காக இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டீர்கள்? இந்தக் கேள்விகளுக்கும் ஏனைய கேள்விகளுக்கும் சந்தேக நபரால் நியாயமான பதில்களை வழங்க முடியவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



