கிணற்றில் விழுந்து 11 வயதுச் சிறுவன் மரணம்
#Death
#Hospital
#Jaffna
#Police
#Lanka4
Kanimoli
2 years ago

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - இலகடி பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் பொதுக்கிணறு ஒன்றிலேயே விழுந்து உயிரிழந்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்த பரமுநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
எனினும் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததற்கான காரணம் வெளிவரவில்லை.



