டி. எஸ். சேனநாயக்காவின் தொலைநோக்குப் பார்வையில் இருந்து விலகியுள்ளோம்: ஜனாதிபதி

மறைந்த பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் இருந்து நாம் விலகியுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையை சிங்கப்பூராக மாற்ற இந்த நாட்டின் அரசியல்வாதிகள் கனவு கண்டாலும்இ கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் பாரியதென ஜனாதிபதி கூறுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇமறைந்த பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா அவர்களின் 71வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சேனநாயக்கவின் பாரம்பரியத்தை வலுவாகவும் சக்திவாய்ந்ததாகவும் கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த தசாப்தங்களில் மஹாவெலிய போன்ற சுமார் 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கு கிடைத்த பணம் பொதுத்துறையினர் வியாபாரம் செய்வதால் அழிந்துவிட்டது.
எதிர்காலத்தில் அரச துறையானது வர்த்தகத்தில் இருந்து விலகி தனியாருக்கு திறந்துவிடப்பட்டு சுதந்திரமான மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.



