மூன்று இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

கடலில் காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று (22) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நேற்று (21) காலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
பின்னர் நேற்று மதியம் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று (21) பிற்பகல் வெல்லவாய நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன நான்கு இளைஞர்களும் 20-21 வயதுக்கு இடைப்பட்ட கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
நேற்று காலை வெள்ளவாய நீர்வீழ்ச்சியை காண சுற்றுலாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் குழுவொன்று வந்திருந்தனர்.
இந்த அருவியில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என சுற்றுவட்டார பகுதிகளில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையை பொருட்படுத்தாத இளைஞர்கள் கூட்டம் அருவி பகுதியில் குளிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த அருவி மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி நீந்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.



