சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டாவது எனக்கு பதில் தாருங்கள்! விமல் கேள்வி

இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பதன் மூலம் அந்நிய செலாவணி அதிகரிக்குமா குறைவடையுமா? எனக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டாவது இத்தற்கான பதிலை தாருங்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த கேள்வியை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்
‘நட்டமடையும் நிறுவனங்களையே விற்பனை செய்யப்போவதாக இதற்கு முன்பு கூறினீர்கள்.
தற்போது ஏன் இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கின்றீர்கள்.
அவ்வாறு இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதால் இங்குள்ள பணம் டொலர்களாக மாற்றப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களது கைகளுக்கு செல்லும்.
அது அந்நிய செலாவணியை அதிகரிக்குமா குறைக்குமா?
சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டாவது எனக்கு இதற்கான பதிலை தாருங்கள்’ என்றார்.



