கேட்டேன் கேட்டேன் எதுவும் கிடைக்கவில்லை! ரணில் ஆதங்கம்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
கேட்டேன் கேட்டேன் எதுவும் கிடைக்கவில்லை! ரணில் ஆதங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் இன்று (21) ஆற்றுப்படுத்தியதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீண்ட விளங்கங்களை கொடுத்தார்.

தனதுரையில் ஓரிடத்தில்,  நான் முதலில், பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரினேன். ஆனால் எனக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பின்னர் நான் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும், எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரினேன். ஆனால் கிடைக்கவில்லை. வரவு-செலவுத்திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் கேட்டேன். எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. தற்போதைய பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன். ஆனால் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை” என்றார்.

இந்த வரிகளை வாசிக்கும் போதும் கேட்கும் போதும், அமர்களம் படத்தில் வரும், “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” என்று தொடங்கும் பாடல் வரிகளை ஞாபகப்படுத்தியதாய் அமைந்திருந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!