அதிக விலைக்கு முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகரகளுக்கு அபராதம்
#Egg
#Arrest
#Police
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகரகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ, பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல கடைகளின் வர்த்தகர்கள் குழு ஒன்றிற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அபராதம் விதித்துள்ளது.
முட்டை கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாக இருந்த போதிலும் 50 ரூபாவிற்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி 210 ரூபா நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரியிடம் கஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் 03 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



