ஜெயிலர் இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு , தீபாவளி பண்டிகையை ஒட்டி படம் திரைக்கு வரலாம்.

#TamilCinema #Actor #Director
Mani
2 years ago
ஜெயிலர் இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு , தீபாவளி பண்டிகையை ஒட்டி படம் திரைக்கு வரலாம்.

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பிளாக்பஸ்டர் காந்தாரா படம் எடுக்கப்பட்ட பண்ணை வீட்டில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க முடிவு செய்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு முடிந்த உடனேயே டப்பிங், இசையமைப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கும். பின்னர் ரிலீஸ் தேதியையும் அறிவிக்கிறார்கள்.

ஜெயிலர் ஆகஸ்ட் அல்லது தீபாவளி நேரத்தில் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நெல்சன் இயக்கினார். சிறையில் இருக்கும் தாதாவை ரவுடிகள் முற்றுகையிடுவதும், அதை ஜெயிலரான ரஜினிகாந்த் எப்படி உடைக்கிறார் என்பதும் கதை என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!