17 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 23 வயதுடைய நபர் கைது
#SriLanka
#School Student
#Sexual Abuse
#Hotel
#Arrest
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயதுடைய மாணவியும் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாத நபர் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகள் சுமார் ஆறு வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக அவரது தாய் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை எனவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.



