40 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார் விபத்து: இளம் ஆசிரியர் பலி

#SriLanka #sri lanka tamil news #Tamilnews #Tamil People #Tamil #Accident #Death #Sri Lanka Teachers
Prabha Praneetha
2 years ago
40 அடி பள்ளத்தில் வீழ்ந்த  கார் விபத்து:  இளம் ஆசிரியர் பலி

பதுளை- செங்கலடி வீதியின்,  பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள  வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் 
 புரண்டு பிரதான வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த ஆசிரியர் பரணிதரன் வயது -39 மற்றும்  இரு பிள்ளைகளின் தந்தையான இவர்  , பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வருவதுடன், பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!