பாடசாலை மாணவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

#SriLanka #Sri Lanka Teachers #Ministry of Education #Health #Student #students #School Student #Lanka4
Mayoorikka
2 years ago
 பாடசாலை மாணவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

அதிக வெப்பநிலை உள்ள நாட்களில் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளை நடத்துவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

இதன்படி,   இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளை நடத்தும் போது சோர்வைப் போக்க குறுகிய ஓய்வு கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை நிலவும் வேளைகளில் மாணவர்களை விளையாட்டு மைதானத்தில் நிற்க வைக்கக்கூடாது என்றும், மாணவர்கள் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்கள் மயங்கி விழுந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, 1990 சுவாசார்யா ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து அவரை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த வழிகாட்டுதல்களின் பிரதிகள் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!