உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஏற்புடையதல்ல - மஹிந்த தேசப்பிரிய

#Election #Election Commission #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஏற்புடையதல்ல - மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஏற்புடையதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதே பொருத்தமானது எனவும், ஆனால் தற்போது அசௌகரியமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 25ஆம் திகதி இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தாமதமானால், ஜனாதிபதி எமது எல்லை நிர்ணய அறிக்கையை வழங்கிய பின்னர் அதனுடன் கூடிய வர்த்தமானியை வெளியிட்டால், மீளாய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அங்குள்ள வாக்குகளின்படி நாடாளுமன்றம் அதனை தீர்மானிக்க வேண்டும்.

என்னதான் இருந்தாலும், தேர்தல் ஒன்று ஒத்திவைப்பது, தாமதமாவது அவ்வளவு நல்லதல்ல. குறைந்தபட்சம் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இந்த தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 25ம் திகதி நடத்தினால் நல்லது. ஆனால் இப்போது நடத்துவது கடினம் என்று தெரிகிறது. ஏனெனில் தபால் வாக்குகளுக்கு கூட அரசு அச்சகத்தில் இருந்து வாக்குச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத ஒரு நிலை உள்ளதே..”எனவும் தெரிவித்துள்ளார் 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!