கடன் உதவி கிடைக்காவிட்டால் இரண்டே வாரத்தில் நாடு கவிழும்: பந்துல
#Bandula Gunawardana
#SriLanka
#sri lanka tamil news
#Minister
#Lanka4
Prathees
2 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்காவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நாட்டை நகர்த்த முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சாரதிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம்.
ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர், ஒரு அரசியல்வாதி பொறுப்பேற்க முடியாது.
சுதந்திரத்திற்குப் பிறகு, குறிப்பாக 77க்குப் பிறகு, நாம் உலகத்திலிருந்து கடன் வாங்கினோம். அவர்களால் பணம் செலுத்த முடியாத நிலையில், பணம் அச்சிடப்பட்டது.
இது தொடர்ந்து செய்யப்பட்டது. எனவே, இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது.
அதனால்தான் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கேட்டோம் என தெரிவித்தார்.



