காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களுக்குஇடையிலான படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும்

#Boat #Jaffna #India #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களுக்குஇடையிலான படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களுக்கு இடையில் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்


ஏற்கனவே இவ்வான பல திகதிகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த புதிய கால அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அதிகாரிகளால் கையாளப்படும் இந்த படகுN சேவைக்கு இலங்கை உதவிகளை மாத்திரமே மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்வரும் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்கான களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் உட்பட சுங்கப் பகுதி மற்றும் குடிவரவுப் பகுதிகளை நிர்மாணிப்பதற்காக இதுவரை 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.


ஆரம்பத்தில் இந்த படகு ஒரே நேரத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்லும்.
அத்துடன் நாள் ஒன்றுக்கு ஒரு பயணத்தை மட்டுமே மேற்கொள்ளும்.
எனினும் பின்னர் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


ஒரு பயணத்திற்கு இரு வழிகளிலும் கட்டணமாக 9000 ஆயிரம் இந்திய ரூபா அறவிடப்படவுள்ளது.
ஒரு பயணி அதிகபட்சமாக 100 கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்க இந்தியா ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையிலான படகுச் சேவை முன்னர் தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டது,ஆனால் அது 1981 இல் நிறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!