IMF இடம் இருந்து முதல் கடன் தவணை கிடைத்தவுடன் நாட்டின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வரும்
#IMF
#SriLanka
#sri lanka tamil news
#Central Bank
#government
#Governor
#Lanka4
Prathees
2 years ago

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் கடன் தவணை கிடைத்தவுடன் நாட்டின் டொலர் நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகைக்கு நாளை அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் இதன் முதல் தவணையான 390 மில்லியன் டொலர்கள் செவ்வாய்கிழமைக்குள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதிக் கடன் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் மேலும் நான்கரை பில்லியன் டொலர் கடன் தொகை பெறப்படும் என்றும் அவர் கூறினார்.



