விக்ரமின் துருவ நட்சத்திரம் குறித்த புதிய தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

#TamilCinema #Actor #Director
Mani
2 years ago
விக்ரமின் துருவ நட்சத்திரம் குறித்த புதிய தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. ரித்துவர்மா முக்கிய வேடத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான படம் ரசிகர்களை மகிழ்விக்கும்.

இப்படம் 2017 இல் தொடங்கியது. முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், “ஜான் உங்களை விரைவில் சந்திப்பார்” என்றும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசையில் தீவிரம் காட்டுவதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி மே மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!