வலி. கிழக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினருக்கு வாள்வெட்டு

#Police #Arrest #Jaffna #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
வலி. கிழக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினருக்கு  வாள்வெட்டு

வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம்  இன்று இரவு 8.30 மணி அளவில் கோப்பாய், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி  அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர். இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து அங்கு திரண்டவர்கள் இருவரையும் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!