நாட்டில் நிலவும் பிரச்சினை பிரச்சாரப் போர் அல்ல: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் .

#Protest #SriLanka #sri lanka tamil news #government #Lanka4 #Sri Lanka President
Prathees
2 years ago
நாட்டில் நிலவும் பிரச்சினை பிரச்சாரப் போர் அல்ல: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் .

தொழில் வல்லுநர்களின் வேலைநிறுத்தம் தோல்வியடைந்ததாக சித்தரிக்க முயன்று, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தோல்வியடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்,

வேலைநிறுத்தத்தின் போது பொது போக்குவரத்து மற்றும் வங்கித் துறையின் நிலை குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டாலும், மக்கள் எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்பதை பார்க்கத் தவறிவிட்டது. 
.
அதேநேரம் டொலரின் மதிப்பு குறையும் போது செய்தி வெளியிட்ட அந்த ஊடகப்பிரிவு, டொலரின் மதிப்பு உயர்ந்தபோது அதைச் செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் நாட்டில் நிலவும் பிரச்சினை பிரச்சாரப் போர் அல்ல என்றும் மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் மரிக்கார் கோரிக்கை விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!