ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவைப் பார்க்க புலனாய்வு பிரிவிற்கு சென்ற நீதவான்
#Court Order
#Investigation
#Colombo
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக மற்றும் பாணந்துறை குடு சலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன ஆகிய இருவரையும் அவதானிக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்றுள்ளார்.
நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவரும் 90 நாட்களுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, ஹரக் கட்டா மற்றும் பாணந்துறை குடு சலிந்து தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.



