காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிப்பு
#Police
#Arrest
#children
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவரும் சிறுவர் இல்லத்தில் மீளவும் சேர்க்கப்பட்டனர்.



