உணவு பயிர்ச்செய்கை பாதுகாப்பு விடயத்தில் இலங்கை சிறந்த நிலையில்!

#SriLanka #Sri Lanka President #Food #World_Health_Organization #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
உணவு பயிர்ச்செய்கை பாதுகாப்பு விடயத்தில் இலங்கை சிறந்த நிலையில்!

உணவு பயிர்ச்செய்கை பாதுகாப்பு விடயத்தில் இலங்கை கடந்த ஆண்டை விட சிறந்த நிலையில் உள்ளது என உணவு விவசாய ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி விம்லேந்திர சரன் தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவு மற்றும் பயிர் பாதுகாப்பின் நிலை என்ன ? 2022 ம் ஆண்டிலிருந்ததை விட இலங்கை சிறந்த நிலையில் உள்ளதா என்ற கேள்விக்கு எனது குறுகிய பதில் ஆம் என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நான் மேலும் விரிவாக தெரிவிக்க விரும்புகின்றேன் 2022 இ;ல் இலங்கையின் விவசாயதுறை பலசவால்களை சந்தித்தது என விம்லேந்திர சரண் தெரிவித்துள்ளார்.

உரங்கள் தட்டுப்பாடு காரணமாக பயிர்களிற்கு கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை,அதிகரித்த பணவீக்கம் அதன் காரணமாக எரிபொருள் உட்பட விவசாயத்திற்கு அவசியமான பொருட்களின் விலைகள் அதிகரித்தமை விவசாயிகளை குறிப்பாக சிறிய விவசாயிகளை நெருக்கடியான நிலைக்கு தள்ளியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுதிட்டமும் உணவு விவசாய ஸ்தாபனமும் கடந்த மார்ச் மாதம் இணைந்து முன்னெடுத்த ஆய்வுகள் உணவுப்பொருட்களின் உயர்விலைகள் பல குடும்பங்கள் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியதால் 6.3 மில்லியன் குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அந்த நிலைமைய சமாளிப்பதற்காக குறைந்தளவு  உணவை உண்ணுதல் உணவை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் நலிந்த நிலையிலிருந்த  குடும்பங்கள் ஈடுபட்டன இதனால் இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பு வீழ்ச்சியடையும் நிலை காணப்பட்டது எனவும் விம்லேந்திர சரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த ஆபத்தை கட்டுப்படுத்துவதற்காக இரு தரப்பு மற்றும் ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டது மிகவும் அவசியமான உரங்களை கொண்டுவந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!