குருணாகல் மேல் நீதிமன்றத்தில் அதிகளவில் பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்
#SriLanka
#kurunagala
#Court Order
#children
#Sexual Abuse
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

நாடளாவிய ரீதியில் உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை வடமேல் மாகாணத்தில் இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 6,443 வழக்குகள் நாடளாவிய ரீதியில் உள்ள உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 543 வழக்குகள் குருணாகல் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மேலும், பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரும் விசாரணைகளை நடத்தியதுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.



