போலி ஆவணங்களுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாட்டுக்கு செல்ல உடந்தையாக இருந்தவர் கைது

#SriLanka #sri lanka tamil news #Tamilnews #Arrest #Police #TamilNadu Police
Prabha Praneetha
2 years ago
போலி ஆவணங்களுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாட்டுக்கு செல்ல உடந்தையாக இருந்தவர் கைது

முன்னாள் புலி பெண் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை உருவாக்கி வெளிநாடு செல்வதற்கு சந்தேகநபர் கான்ஸ்டபிள் உடந்தையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்த போது கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!