டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு: வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது அதிகரித்த நிலையில் இந்த வாரத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொள்வனவு விலை 320 ரூபாவாகவும் விற்பனை விலை 340 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
பொது மற்றும் தனியார் வங்கிகளில் இந்த வீதங்களில் டொலர்கள் மாற்றப்படுகின்றன.
இன்றைய கொமர்ஷல் வங்கியின் அந்நிய செலாவணி விகித மதிப்புகளின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 320.70 மற்றும் விற்பனை விலை ரூ. 336.00 பதிவாகியுள்ளது. அந்த வங்கியில் நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ.308.72 ஆகவும் விற்பனை விலை ரூ.328 ஆகவும் பதிவானது.
இதேவேளை, ஹட்டன் நஷனல் வங்கியின் இன்றைய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 320 மற்றும் விற்பனை விலை ரூ. 335.00 ஆகவும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் ஹட்டன் நஷனல் வங்கியின் கொள்வனவு விலை அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 312 ரூபாவாகவும் அதன் விற்பனை விலை ரூபா. 327 என்று பதிவு செய்யப்பட்டது.
இன்று செலான் வங்கியின் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.316 ஆகவும் விற்பனை விலை ரூ. 337 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் செலான் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 307 ஆகவும் விற்பனை விலை 329 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இன்று சம்பத் வங்கியின் அமெரிக்க டொலர் கொள்வனவு விலை ரூ.320 ஆகவும் விற்பனை விலை ரூ.335 ஆகவும் இருந்தது. சம்பத் வங்கியின் நேற்றைய அந்நியச் செலாவணி விகிதத்தின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.310 ஆகவும், விற்பனை விலை ரூ. 325 என்று பதிவு செய்யப்பட்டது.
மக்கள் வங்கியில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 320.41 ஆகவும் விற்பனை விலை ரூபா. 339.17 ஆக பதிவானது. நேற்று அந்த வங்கியில் அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.305.05 ஆகவும், விற்பனை விலை ரூ. 331.47 ஆக பதிவானது.
இதேவேளை, இலங்கை வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 320 ஆகவும் விற்பனை விலை 340 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.



