தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்கும்- சரா.புவனேஸ்வரன்
#Sri Lanka Teachers
#strike
#work
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

எதிர்வரும் 15 ஆம் திகதி நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்கவுள்ளது.
எனவே அன்றையதினம் வீண் அலைச்சல்களை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அதன் பொதுச்செயலாளர்சரா.புவனேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



