தொழில் நிபுணர்களிடம் அரசாங்கம் அளித்த வாக்குறுதி

தொழிற்சங்கத்தினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழில் நடவடிக்கையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு போதிய தீர்வு கிடைக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக முன்னர் முன்வைக்கப்பட்ட மாற்று யோசனைகள் தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நாளை (14) காலை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதாகவும் அதன் பின்னர் ஜனாதிபதி இது தொடர்பில் அரசியல் ரீதியாக பதில் அளிப்பார் எனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகள் தொழில் நிபுணரிடம் உறுதியளித்ததாக டாக்டர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.



