ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் பயன்படுத்தும் தண்ணீர் குறித்து கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Protest
Prathees
2 years ago

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் சுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதாக கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார குறிப்பிடுகின்றார்.
கண்ணீர் புகை மற்றும் நீர் தொடர்பில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அந்த சந்தேகத்தை உண்மையென நிரூபிக்கவும் முடியும் என்றார்.
இலங்கையில் கண்ணீர்ப்புகை உற்பத்தி செய்யப்படாமல் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்த அவர், நீர்த்தாக்குதலுக்கு சுத்தமான நீர் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போராட்டங்களை கட்டுப்படுத்துவது காவல்துறையின் கடமையாகும் என்றார்.



